தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து: ஒருவர் மரணம், 8 பேர் காயம் - thayilpatti crackers factory fire accide

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாயில்பட்டியில், பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

thayilpatti-crackers-fire-accident-8-wounded-one-died
தாயில்பட்டியில் வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து: 8 பேர் காயம், ஒருவர் உயிரிழப்பு

By

Published : Sep 10, 2021, 12:49 PM IST

Updated : Sep 10, 2021, 2:29 PM IST

விருதுநகர்:சாத்தூர் அருகேயுள்ள தாயில்பட்டி எஸ்.பி.எம். தெருவில் முத்தையா என்பவரது மகன் பாலமுருகன் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

அப்போது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

தாயில்பட்டியில் வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து

சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட எஸ்.பி.எம். தெருவைச் சேர்ந்த சின்னராஜ் மகன் சண்முகராஜ் (52) என்பவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

படுகாயமடைந்த முத்து செல்வி (36), செல்வமேரி (40), சுகந்தி (24), சீதாலட்சுமி (38), முத்துராஜ் (45), பாலமுருகன், முத்து முனிஸ்வரி (28) ஆகியோர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவலர்கள், பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:ஆயுதங்களைக் காட்டி பெட்ரோல் பங்கில் 1.70 லட்சம் ரூபாய் கொள்ளை

Last Updated : Sep 10, 2021, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details