தமிழ்நாடு உள்துறைச் செயலாளராகப் பணியாற்றி வருபவர் பிரபாகர். இவருடைய தாயார் ராஜாமணி அம்மாள், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மேட்டுத்தெருவில் வசித்து வந்தார். இந்நிலையில் ராஜாமணி அம்மாள் நேற்று முன்தினம் (மே.18) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக மேட்டுத் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது உடலுக்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.