விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி மற்றும் புதுப்பட்டி கிராமத்தில் திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திறந்தவெளியில் நடைபெற்ற கூட்டத்தில் தரையில் அமர்ந்து பொதுமக்களின் குறைகளை தங்கம் தென்னரசு கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தமிழ்நாடு அரசு கரோனாவை காரணம் காட்டி கிராம சபை கூட்டத்தை ரத்து செய்தது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் என்பது விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கக்கூடிய சட்டமாக உள்ளது. விவசாய தொழில்கள் நசிந்துவிடும் என்ற சூழ்நிலையில் விவசாயத்தை காக்கும் நிலை அனைவருக்கும் வந்துள்ளது.