விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் ஆதிதிராவிடர் காலனி அமைப்பதற்காக கடந்த 1991 ஆம் ஆண்டு 1 ஏக்கர் 55 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த இடத்திற்கு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்பட்டது.
ஆனால் இந்த தொகை போதாது என கூடுதல் இழப்பீட்டு தொகை கேட்டு இடத்தின் உரிமையாளர்களான உமாமகேஸ்வரி, பொன் வெங்கடேசன் குமார் உட்பட சிலர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம் நில உரிமையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என வட்டாட்சியருக்கு உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற உத்தரப்படி தொகை வழங்கப்படாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.