தமிழ்நாடு

tamil nadu

ராஜிவ் காந்தி கொலை வழக்கின் ஆயுள் கைதி சுவாமி தரிசனம்

By

Published : Jan 13, 2020, 7:53 PM IST

விருதுநகர்: பரோலில் வெளிவந்துள்ள ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் தனது சொந்த ஊரில் உள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏழு தமழர் விடுதலை  தடா ரவிச்சந்திரன்  ராஜிவ் கொலை வழக்கு  thada ravichandran get aadhar card in aruppukottai  ரவிச்சந்திரன் விடுதலை
ராஜிவ் கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன் சொந்த ஊரில் சுவாமி தரிசனம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரனுக்கு மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஜனவரி 10 முதல் 25ஆம் தேதி வரை 15 நாள்கள் சாதரண பரோல் வழங்கியதைத் தொடர்ந்து அவர்சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், அருப்புக்கோட்டையில் உள்ள அமுதலிங்கேஸ்வரர் கோயில், சொக்கலிங்கபுரம் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் இன்று அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

ராஜிவ் கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன் சொந்த ஊரில் சுவாமி தரிசனம்

பின்னர் வருவாய் வட்டாசியர் அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையத்தில் ஆதார் அடையாள அட்டைக்குப் பதிவு செய்து புகைப்படம் மற்றும் கை ரேகை வைத்து ஆதாரைப் பெற்றுக்கொண்டார். பின்பு காவலர்களின் பலத்த பாதுகாப்புடன் அவரது இல்லத்திற்கு வந்தடைந்தார்.

இதையும் படிங்க: தனுஷ் எப்போதும் இயக்குநர்களின் நடிகர் - இயக்குநர் வெற்றிமாறன்

ABOUT THE AUTHOR

...view details