தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பீதியால் தடையான கோயில் திருவிழா - பக்தர்கள் காத்திருப்பு போராட்டம்.! - ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு போராட்டம்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்திய இந்து முன்னணியைச் சேர்ந்த மாவட்ட தலைவர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் காத்திருப்பு போராட்டம் நடத்திய பக்தர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் காத்திருப்பு போராட்டம் நடத்திய பக்தர்கள்

By

Published : Mar 20, 2020, 10:29 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா வரும் 23ஆம் தேதி நடைபெற இருந்தது ஆனால் கொரோனோ வைரஸ் பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் விழாவை தடை செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து நேற்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் பொதுமக்களை திரட்டி அசம்பாவிதங்கள் ஏற்படும் வகையில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இந்து முன்னணியைச் சேர்ந்த மாவட்ட தலைவர் யுவராஜ் மற்றும் நிர்வாகிகளான சுரேஷ், மணிகண்டன், முத்துராஜ், சிவா, வினோத்குமரன், ஆனந்த், நல்லுசாமி உட்பட எட்டு பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு பகுதி கிராம நிர்வாக அலுவலர் வேல்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் காத்திருப்பு போராட்டம் நடத்திய பக்தர்கள்

கோயில் வளாகத்தில் கூச்சலிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்திய இந்து முன்னணியைச் சேர்ந்த மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details