தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளம்பெண் கொலை - எட்டு மாதங்களுக்கு பின் திருமணத்திற்கு மீறிய உறவு - Teen murder - Eight months after her boyfriend was arrested

அருப்புக்கோட்டை பகுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின்பு எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் கொலை - எட்டு மாதங்களுக்கு பின் திருமணத்திற்கு மீறிய உறவு
இளம்பெண் கொலை - எட்டு மாதங்களுக்கு பின் திருமணத்திற்கு மீறிய உறவு

By

Published : Apr 25, 2021, 5:17 PM IST

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப் பாறை சேர்ந்தவர் லிங்கம். இவரது மகள் சத்யபிரியா (21). இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த வசந்த பாண்டி (26) என்பவருடன் திருமணம் ஆனது.

பின்னர், குழந்தை பெறுவதற்காக தனது தந்தை வீட்டிற்கு அருப்புக்கோட்டைக்கு வந்த சத்யபிரியா குழந்தை பெற்றும் கணவர் வீட்டுக்குச் செல்லாமல் தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வேலைக்கு சென்ற சத்யபிரியா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, சத்திய பிரியாவின் தந்தை லிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கடந்த 8 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், சத்தியபிரியாவின் மொபைல் நம்பரை வைத்து அவருடன் அடிக்கடி பேசியவர் ஞானகுருசாமிதான் என்பது தெரியவந்துள்ளது.

விசாரணையில், சாத்தூர் கண்மாய் சூரங்குடியை சேர்ந்த ஞான குருசாமி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்திய காரணத்தால் சாத்தூர் போக்குவரத்து நகர் பின்புறம் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று சத்யபிரியா அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை எலும்புக்கூடாக மீடெடுத்தனர்.

அருப்புக்கோட்டை காவல் துறையினர் காணாமல் போனதாகப் பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

இதையும் படிங்க: கோவாக்சின் விலை என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details