விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த வத்திராயிருப்பு முத்தாலம்மன் சாவடி அருகே செயல்பட்டு வரும் திருப்பதி என்பவரது டீக்கடையில் பற்றிய தீ, அருகில் உள்ள பழக்கடை, மருந்தகம், உணவகம் என ஐந்தாறு கடைகளுக்கும் பரவியது.
பல கடைகளில் தீ விபத்து! - srivilliputhur
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஒரு கடையில் பற்றிய தீ மளமளவென பக்கத்துக் கடைகளுக்கும் பரவியதால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
தீ விபத்து
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை பல மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நேர்ந்ததா? அல்லது யாரேனும் தீ வைத்தார்களா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.