விருதுநகர்:வணிக சங்கங்களின் பேரமைப்பு விருதுநகர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் இன்று விருதுநகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்பு பேசிய விக்கிரமராஜா, "தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அரசு கடைகளை இடித்து கடைகளை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே நெல்லை, தூத்துக்குடியில் இடிக்கப்பட்ட கடைகளுக்குப் பதிலாக புதிய கடைகளை கட்டித்தரமால் அரசு இழுத்தடிக்கிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் முடிக்கப்படவேண்டும் என்றால் எத்தனை மாதங்களில் கடைகள் கட்டி முடிக்கப்படும் என்ற உத்திரவாதம் தந்தால் மட்டுமே கடைகளில் அரசு கைவைக்கமுடியும். இல்லையென்ரால் அதை எதிர்த்து போராடுவதற்கு தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் போராடத் தயாராக உள்ளனர். இதை அரசு புரிந்துகொள்ளவேண்டும். வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்.