விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி.பாண்டுரங்கனை ஆதரித்து நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வெற்றி ஒன்றையே இலக்காக வைத்து எங்களது பயணம் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் கட்டப்பஞ்சாயத்தை விரும்ப மாட்டார்கள். மாறாக வளர்ச்சியை மட்டுமே தேவையாகக் கொள்வார்கள்.
தமிழ்நாடு மக்கள் இரட்டை இலை, தாமரை, மாம்பழம் ஆகிய சின்னங்களுக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். தமிழ்நாட்டின் நண்பனாக மோடி விளங்குகிறார். எதிரியாக வேறு சிலர் விளங்குகிறார்கள். தமிழ்நாட்டுக்கு ஆறு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.