தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகர் வெடி விபத்து: சிகிச்சைப் பெறும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் ஆறுதல் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் தொழிலாளர்களை தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வெடி விபத்து
வெடி விபத்து

By

Published : Feb 15, 2021, 10:20 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளத்தில் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கர்ப்பிணி உள்பட 19 பேர் உயிரிழந்தனர். பலர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி சிகிச்சைப் பெற்றுவரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பட்டாசு ஆலைக்குச் சென்று ஆய்வுமேற்கொண்டார். அப்போது அவர் வெடி விபத்து குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவரும் தொழிலாளர்கள் விவரம்:

1 முத்துகுட்டி (19)

2 வெயிலுமுத்து (60)

3 பாலசுப்பு (47)

4 முத்துபாண்டி (17)

5 ஜெயா (50)

6 மேரி (28)

7 புஷ்பம் (60)

8. வசந்தா (43)

9 அந்தோணி (48)

10 ஏகபாக்கியம் (40)

11 சூசைரத்தினம் (45)

12 புரூஸ்லி (40)

13 மாலையம்மாள் (46)

14 கருப்பசாமி (26)

15 பாஸ்கர் (60)

16 தேவசகாயம் (26)

17 காளியப்பன் (32)

18 வீரலட்சுமி (40)

19 காளிராஜ் (38)

20 அந்தோணிராஜ் (44)

21 பாண்டியலட்சுமி (8)

வெடி விபத்து

இந்த ஆய்வில் தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி உடன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: விருதுநகர் வெடி விபத்து: தமிழ்நாடு வருவாய்த் துறை ஆணையர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details