தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர்கல்வியில் தமிழ்நாடு முன்னணி - பால்வளத்துறை அமைச்சர் பெருமிதம் - virudhunagar district news in tamil

உயர்கல்வியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

minister kt rajendra balaji
உயர்கல்வியில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் பால்வளத்துறை அமைச்சர் பெருமிதம்

By

Published : Feb 20, 2021, 4:30 PM IST

விருதுநகர்: கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மூடப்பட்ட கல்லூரிகளில் இணையவழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில், கலந்துகொள்ள ஏதுவாக மாணவர்களுக்கு எல்காட் நிறுவனத்தின் மூலம், நான்கு மாதங்களுக்கு விலையில்லா 2ஜிபி டேட்டா கார்டுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்ப்டடது.

பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில், 44 கல்லூரிகளை சேர்ந்த 25 ஆயிரத்து 822 கல்லூரி மாணவிகளுக்கு விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தை சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் முன்னிலையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர், சமுதாயத்தில் ஏற்றம் பெற கல்வி அவசியம் என்பதை உணர்ந்த தமிழ்நாடு அரசு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்டவை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் உயர்கல்வி பயில உதவித்தொகையுடன் கூடிய சலுகைகளை மாநில அரசு அளித்து வருதாகவும் அவர் குறிப்பிட்டார். பெண் கல்வி முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணையாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர், நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பங்களை மாணவர்கள் பயன்படுத்தி் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:'பிரதமர் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் 1,217 நபர்கள் பயன்'

ABOUT THE AUTHOR

...view details