விருதுநகரில் உள்ள கட்டபொம்மன் தெருவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தங்கபாண்டி என்ற கட்டட தொழிலாளி தனது தாய் முத்துலட்சுமி, தனது மனைவி சுகந்தி, மூன்று பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வீடு மற்றும் இடம் வாங்கி அங்கு குடிபெயர்ந்துள்ளார். அவற்றை அபகரிக்கும் நோக்கத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் முயற்சி மேற்க்கொண்டு வருவதாக தங்கப்பாண்டி தெரிவித்தார்.
கட்டப்பஞ்சாயத்து கொடுமை: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி! - collector office
விருதுநகர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தின்போது கட்டபஞ்சாயத்துக் காரணமாக தற்கொலை செய்ய முயன்ற குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அந்த ஊரில் உள்ளவர்கள் தன் குடும்பத்தினரை புறக்கணிப்பதாகவும் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கக் கூடாது, கழிவு நீர் கால்வாய் பயன்படுத்தக் கூடாது, குழந்தைகளைத் தெருவில் எங்கும் விளையாடவிடக் கூடாது, பொதுப்பாதையில் நடக்கக் கூடாது என கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் கூறினார். தங்களை ஊரைவிட்டே விரட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுவதாகவும் கட்டப் பஞ்சாயத்துக்குக் கட்டுப்படாத காரணத்தால் தங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தில் நான்கு முறை புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் முதல்வர் வரை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த புகார் சம்பந்தமாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து தன்னையும் தன் குடும்பத்தினரையும் அலைக்கழித்து வருவதாகக் கூறிய அவர், தனக்கு நீதி கிடைக்கவில்லையென்பதால், குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்தார். பின்பு அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி தங்கப்பாண்டியுடன் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.