விருதுநகர்: தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை பணிகளை தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
100 விழுக்காடு வாக்குப்பதிவு: விழிப்புணர்வு பேரணி நடத்திய மாணவர்கள் - Tamil Nadu Legislative Assembly Election
ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிலையில், பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு அலுவலர்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் தனியார் கல்லூரி சார்பில் பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணியின் முடிவில், 'உறுதியாக வாக்களிப்போம் கையூட்டு பெற்றுக் கொண்டு வாக்களிக்க மாட்டோம்’ என மாணவர்கள், பொதுமக்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
இதையும் படிங்க:திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு