விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தசுந்தரமூர்த்தி என்பவர் கடந்த 2009 ஜூலையில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். போலி என்வுண்டரில் தனது கணவரை சுட்டுக் கொன்ற சிவகாசி காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், காவலர்கள் காமராஜ், சிவா, கருணாகரன் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சுந்தர மூர்த்தியின் மனைவி வசந்தி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணைய நீதிபதி ஜெயசந்திரன், சுந்தரமூர்த்தி உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களை மேற்கோள் காட்டி, இது போலி என்கவுண்டர் எனக் கூறி தொடர்புடைய நான்கு போலீசாரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவும், அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைத்தார்.