விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுப்பொருள்கள் தொகுப்பு வாங்குவதற்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்களை ஊழியர் ஒருவர் தள்ளிவிடும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுப்பொருள்கள் தொகுப்பு கடந்த 4ஆம் தேதிமுதல் வழங்கப்பட்டுவருகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.