விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி (தீ மிதி) திருவிழா மார்ச் மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்களாக நடைபெற்ற இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
முன்னதாகவே நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா - Srivilliputhur Mariamman Temple Festival
விருதுநகர்: கரோனா கட்டுப்பாட்டால் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா முன்னதாகவே இன்று அதிகாலை நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று காலை 6 மணி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் வந்துள்ள நிலையில் வழக்கமாக பங்குனி அமாவாசை நாளன்று அதாவது 12ஆம் திருநாள் நடைபெறும் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா முன்னதாகவே இன்று அதிகாலை தொடங்கியது.
இதற்கான ஏற்பாடுகள் நேற்று இரவே கோயில் முன்பு செய்யப்பட்டது. அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் 4 ரத வீதிகள் வழியாக சென்று வந்து கோயிலின் அருகே தீ மிதித்தனர். விருதுநகர் மாவட்ட ஏடிஎஸ்பி மாரிராஜ் முதலில் பூக்குழி இறங்கி விழாவை தொடக்கி வைத்தார். விழாவில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.