விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உலகப் பிரசித்திப் பெற்ற ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் இன்று (அக். 26) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில், “கடந்த சில நாள்களுக்கு முன்பாகப் பெண்களைப் பற்றி இழிவாக மனு சாஸ்திரத்தில் கூறியிருப்பதாகக் கூறி திருமாவளவன் தெரிவித்திருந்தார். அந்த மாதிரி எவ்வித கருத்தும் மனு சாஸ்திரத்தில் இல்லை. ஆகையால் பெண்களைப் பற்றி தவறாகப் பேசிய திருமாவளவனுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன்” எனப் பேசினார்.