விருதுநகர்: தஞ்சை பெருவுடையார் கோயில் குறித்து ஜோதிகா பேசியதற்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகை ஜோதிகா கருத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம்.. - srivilliputhur jeeyar condemns actress jyothikas speech
தஞ்சை பெருவுடையார் கோயில் குறித்து நடிகை ஜோதிகா பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பும், ஆதரவும் வந்தன. இவ்வேளையில் ஜோதிகாவின் பேச்சுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் தனது கண்டனத்தை பதிவுசெய்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
srivilliputhur jeeyar condemns actress jyothikas speech
சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஜோதிகா கோயில் கட்டுவதைவிட மருத்துவமனைகளுக்கு நிதி வழங்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள காணொலியில் நடிகை ஜோதிகாவின் கருத்து கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து அவர்களது குடும்பத்தினர் இவ்வாறு பேசி வருகின்றனர். இனிவரும் காலங்களில் இந்துமதம் குறித்து இவ்வாறு பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.