தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொரோனா: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள் - ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்

விருதுநகர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கோயில் நடைகள் அடைக்கப்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் முன்பு பூக்குழி குண்டத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுற்றிவந்து பூ (தீ) இல்லாத குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர்.

temple
temple

By

Published : Mar 23, 2020, 3:00 PM IST

சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவிருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலி;ன முக்கிய திருவிழாவான பூக்குழி நடத்தப்படாததால் நேர்த்திக் கடனை நிறைவேற்ற பக்தர்கள் வெறும் குண்டத்தில் இறங்கி வழிபாடு செய்தனர்.

திருவிழா தொடங்கி ஒரு சில நாட்களிலேயே கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் கோயில் மூடப்பட்டநிலையில், பெரிய மாரியம்மன் கோவயில் நடையும் சாத்தப்பட்டு ஆறு கால பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் 13 நாள்கள் நடைபெறும் பூக்குழி திருவிழாவின் முக்கிய நிகழ்வான 12ஆம் நாள் திருவிழாவான பூக்குழி இன்று நடைபெற வேண்டிய நிலையில் தமிழ்நாடு அரசின் தடை காரணமாக இந்த வருடம் பூக்குழி திருவிழா கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவித்தது.

இதனையடுத்து கடந்த 12 நாட்களாக விரதம் இருந்து வந்த பக்தர்கள் ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோயில் நடை சாத்தப்பட்டிருந்த போதும் வெளியிலிருந்தே சாமி தரிசனம் செய்தனர். இதில், 1000க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் மஞ்சள் வேஷ்டி, சேலை அணிந்து பூ (தீ) இல்லாத குண்டத்தின் வழியாக இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தீச்சட்டி எடுப்பவர்கள் கையில் தீச்சட்டி ஏந்தியவாறு நான்கு ரத வீதி வழியாக சுற்றிவந்து கோயிலின் முன்பு தீச்சட்டிகளை வைத்திருந்தனர். கோயில் முன்பு கூட்டம் அதிகமாக வர வாய்ப்புள்ளதால் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பக்தர்கள் கூட்டமாக கூடுவதை கலைத்தனர்.

கொரோனாவை பொருட்படுத்தாமல் திருவிழா கொண்டாடும் மக்கள்

பொதுமக்கள் அனைவரும் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருங்கள் என்று பிரதமர் மோடி அறிவுறை வழங்கியுள்ள நிலையில்,கரோனோ வைரஸ் தொற்று பரவுதலை தடுக்க எடுத்துவரும் நடவடிக்கைகளையும், லாக்-டவுனை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கடைப்பிடிக்கவில்லை. அரசின் உத்தரவை மக்கள் பொருட்படுத்தாமல் இவ்வாறு கூட்டமாக கூடுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கோவிட்-19 தொற்றை கையாளுவதில் இந்தியாவின் பங்கு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details