விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஆக. 03) தொடங்கியது.
108 வைணவத் தலங்களில் மிக முக்கியமான ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலாகும். லட்சுமி தேவியின் அம்சமாகிய ஸ்ரீஆண்டாள் பெரியாழ்வாரின் பிள்ளையாக பூமியில் அவதரித்தார் என நம்பப்படுகிறது.
ஆண்டாள், மானிடப் பெண்ணாக பிறந்து பூ மாலை சூட்டி, பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில்தான். இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா, மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்துடன் தொடக்கம்
கரோனா இரண்டாவது அலையின் காரணமாக தமிழ்நாட்டின் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து 3ஆம் தேதி வரை பக்தர்களுக்கு திருக்கோயிலில் அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பக்தர்கள் யாரும் இன்று கோயிலுக்கு நுழைய அனுமதிக்கப்படவில்லை.