விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி நீராட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் ஆண்டாள் மார்கழி மாதம் பாவை நோன்பு இருப்பதற்கு தோழிகளுடன் திருமுக்குளத்தில் நீராட சென்றதை நினைவுகூரும் வகையில் எண்ணைக் காப்பு மார்கழி நீராட்ட உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மார்கழி மாதத்தின் எண்ணைக் காப்பு உற்சவத்தின் முதல் நாளான இன்று, ஸ்ரீ ஆண்டாளுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இது ஜனவரி 15 ஆம் தேதி வரை நாள்தோறும் நடைபெறவுள்ளது.