விருதுநகர்: ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடக்கும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று பெரிய திருத்தேரோட்டம் நடைபெறும்.மொத்தம் பத்து நாள்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் கடந்த 7ஆம் தேதி கருடசேவையும், 9ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது.
தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதிலுமுள்ள வழிபாட்டுத் தளங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுபாடுகள் விதிக்கபட்டு வருகிறது. இருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய கோயில் விழாக்கள் தடையின்றி நடக்க தமிழ்நாடு அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆடிப்பூர விழா இன்று 9ஆம் நாளை எட்டியுள்ளது. வழக்கமாக திரு ஆடி பூரம் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.