விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா ஆடி மாதத்தில் நடப்பது வழக்கம். பத்து நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 20ஆம் தேதி கருடசேவையும், 22ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. தற்போது நிலவி வரும் பொதுமுடக்கத்தால் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய கோயில் விழாக்கள் தடைபடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, ஒரு சில நிபந்தனைகளுடன் கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் அனுமதியின்றி விழாக்கள் நடைபெறுகின்றன. கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர விழா நேற்று (ஜூலை 24) 10ஆம் நாளை எட்டியுள்ளது. ஆடிதேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.