விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆடி மாதத்தில் ஆடி பூர திருவிழா நடத்தப்படுவது வழக்கம். பத்து நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஐந்தாம் நாள் கருட சேவை, ஏழாம் நாள் சயன சேவை உள்ளிட்ட நிகழ்வு மிகவும் பிரபலமானது. தற்போது நிலவி வரும் பொதுமுடக்கத்தால் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய கோயில் விழாக்கள் தடை பெற்று விடக்கூடாது என்பதற்காக ஒரு சில நிபந்தனைகளுடன் கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் அனுமதியின்றி திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதனடிப்படையில், ஆண்டாள் கோயிலில் கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆடிப்பூர விழா தகுந்த இடைவெளியுடன் நடைபெற்றது.