விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 30ஆம் தேதியன்று பள்ளி மாணவிகளை மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க வைத்த திமுக, அதன் கூட்டணி கட்சியினர், பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் கண்டனங்களை பதிவுசெய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இஸ்லாமியர்களின் குடியுரிமையை பாஜக பறிக்கப் போவதாக பொய் சொல்லி நாடு முழுக்க பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளனர். உண்மையை தெரிந்து கொண்ட பொதுமக்கள் ஆதரவு இல்லை என்பதால் போராட்டத்துக்கு பள்ளி குழந்தைகளை பயன்படுத்துகின்றனர். இச்செயலை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.