தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்! - Virudhunagar Sri Parasakthi Mariamman Temple

விருதுநகர்: பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

temple
temple

By

Published : Apr 5, 2021, 10:09 AM IST

தென் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும், அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 4)) பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான இன்று (ஏப்ரல் 5) பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பங்குனி பொங்கலை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து குணமடைந்தார் நல்லகண்ணு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details