விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேவுள்ள இராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் நூற்பாலை நடத்திவருகிறார். இந்நிலையில் நூற்பாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து ராஜபாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவலளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் நூற்பாலையில் இருந்த நூல்கள், இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.