தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு முழுக்கு விழா!

விருதுநகர் : புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தை மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற முழுக்கு விழா நிறைவடைந்தது.

Special Dive Festival at Srivilliputhur Andal Temple!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு முழுக்கு விழா!

By

Published : Feb 5, 2020, 11:10 PM IST

விருதுநகரை அடுத்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் நான்காம் ஆண்டு சிறப்பு முழுக்கு, வழிபாடுகளோடு நேற்று முன்தினம் தொடங்கியது.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள திருப்பாவை கோபுர விமானத்திற்கு, கடந்த 2016 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் 12 ஆம் தேதி 100 கிலோ மதிப்பில் தங்ககவசம் பொருத்தப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நான்காம் ஆண்டாக முழுக்கு நேற்று முன்தினம் யாகசாலை வழிபாடுகளுடன் தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு முழுக்கு விழா!

விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் மகாசாந்தி ஹோமம் நடைபெற்ற நிலையில் இரண்டாம் நாளான நேற்று ஆண்டாள் ரங்கமன்னார் சுவாமிகளுக்கு 108 கலச திருமஞ்சனம் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான இன்று லட்சார்ச்சனையுடன் ஆண்டுமுழுக்கு நடைபெற்று முடிந்தது.

ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு முழுக்கு விழா!

நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் சன்னதி கோபுரத்திற்கு தங்கம் போர்த்தப்பட்ட நிலையில், இன்று காலை சாரம் பிரித்த பின் சூரிய ஒளியில் தகதகவென மின்னி பார்வையாளர்களின் கண்களைக் கவர்ந்து இழுத்திருக்கிறது. இந்தியாவில் தங்கத்தால் போர்த்தப்பட்ட பெரிய கோபுரமாக இதுவே விளங்குகிறது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் சந்தேகம் - 7 பேர் தொடர் கண்காணிப்பு!

ABOUT THE AUTHOR

...view details