தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும் -சாத்தூர் எம்எல்ஏ! - MLA

விருதுநகர்: பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்படும் தொழிலாளா்களுக்கு சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும் என சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் தெரிவித்தார்.

Special burning treatment unit -Sattur MLA

By

Published : Jun 1, 2019, 9:55 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் அமோக வெற்றி பெற்றார். இதனால் சென்னையில் சபாநாயகா் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினராக பதிவியேற்ற பின்பு இன்று முதல் முறையாக சாத்தூா் வந்தடைந்தார்.

சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும் -சாத்தூர் எம்எல்ஏ!

அப்போது எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் பேசிய அவர், சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளா்களுக்கு என சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும். மேலும் சாத்தூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலைய திட்டமும் விரைவில் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details