விருதுநகர்: அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட தனியார் உணவகம், வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக 'பத்து ரூபாய் நாணயத்திற்குப் பிரியாணி' என விளம்பரம் செய்திருந்தது.
இந்நிலையில், விளம்பரத்தைப் பார்த்து முதல் ஆளாக பிரியாணி வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசம்கூட அணியாமலும் அந்த உணவகத்தின் முன் குவிந்தனர்.
பிரியாணி வாங்க ஒவ்வொருவரும் முட்டி மோதியதில், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் பிரியாணி கடையை இழுத்து மூடினர். இருப்பினும், சிலர் பிரியாணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அங்கேயே காத்துக்கிடந்தனர். இதன்பின்னர், அவர்களையும் போலீசார் விரட்டினர்.
'10 ரூபாய்க்கு பிரியாணி' என்ற விளம்பரத்தைப் பார்தது ஆயிரக்கணக்கில் கூடிய பொதுமக்கள் கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழலில் இதுபோன்ற நிகழ்வுகள் கரோனாவை எளிதில் பரப்புவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உலக உணவுத் தினம்; திண்டுக்கல்லில் 5 பைசாவிற்கு பிரியாணி!