விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்பேத்கர் காலனியில், தொண்டைமான் குளம் உள்ளது. இதன் அருகே குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் கண்மாயில் ஆறடி நீளமுள்ள மலைப் பாம்பு இருப்பதைப் பார்த்த பொதுமக்கள், வனத்துறை மற்றும் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
பின்னர், வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே அப்பகுதி மக்கள் பாம்பை பிடித்து வைத்திருந்தனர். வனத்துறையினர் வந்தவுடன் அவர்களிடம் மலைப் பாம்பை ஒப்படைத்தனர். அதன்பிறகு, வனத்துறையினர் பாம்பை மீட்டு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனப் பகுதிக்கு கொண்டு சென்றனர்.