தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! - Road accidents

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

six person injured in car accident in Virudhunagar district
six person injured in car accident in Virudhunagar district

By

Published : Sep 12, 2020, 10:37 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் மதுரையிலிருந்து கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து சுரண்டை சென்ற காரின் டயர் வெடித்ததால் தென்காசியில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த காரின் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது.

இதில் இரண்டு கார்களின் ஓட்டுனர்கள் உட்பட கார்களில் பயணம் செய்த ஆறு பேரும் படுகாயமடைந்தனர்.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்தனர் 108 ஆம்புலன்சில் படுகாயம் அடைந்த ஆறு பேரும் அழைத்துச் செல்லப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 60 வயது பெண்மணி செல்வி என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details