விருதுநகர்:சாத்தூர் அருகே சிப்பிபாறை கிராமத்தில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் தன்ராஜ் ஆகியோர் சங்கரன்கோவில் சாலையில் நேற்று (ஜூலை 20) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே மணல் அள்ளிச் சென்ற டிராக்டர்களைச் சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி கிராவல் மணல் அள்ளி கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து ஐந்து டிராக்டர்கள் மற்றும் கண்மாயில் மணல் அள்ளிக் கொண்டிருந்த ஜேசிபி இயந்திரம் ஒன்றையும் பறிமுதல் செய்து ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் அனுமதியின்றி மணல் அள்ளிய ஜேசிபி, டிராக்டர் ஓட்டுநர்கள் ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளர் பணியிடை நீக்கம்