சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கரோனா காலத்தை எப்படிக் கடத்தலாம் என எண்ணிக் கொண்டிருக்கும்போதே அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டயப்படிப்பு படித்து சாதித்துத் காட்டியிருக்கிறார் சிவகாசி மாணவர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாட்சியார்புரத்தைச் சேர்ந்த வீரபத்திரன் -வாணி தம்பதியின் மகன் நிகில் ஆதித்யன். ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துள்ள இவர், கரோனா காலத்தை எப்படிப் பயனுள்ளதாக மாற்றலாம் என்பதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
அப்படி கரோனா ஊரடங்கு விடுமுறையில் அமெரிக்க ஏல் பல்கலைகலைக்கழகம் நடத்தும் ஆன்லைன் படிப்புகளைத் தேர்வுசெய்து கூகுள் பகுப்பாய்வுத் தேர்வுகளில் ஆறு நிலைகளைக் கடந்து பட்டய படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.
ஆன்லைன் படிப்பில் பயின்று பட்டம் வென்று மாணவன் சாதனை கரோனா காலத்தில் சாதித்தது மட்டுமின்று தான் சார்ந்த சமூகத்திற்கும் தன்னால் இயன்றவற்றை செய்துவருகிறார். அதன்படி தற்போது பிளாக் ஒன்றை தொடங்கி பொருளாதாரம், பங்குச்சந்தை நிலவரம், உலகின் சிறந்த நிறுவனங்கள் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு சந்தேகங்களுக்குப் பதில் அளித்துவருவதாகக் கூறுகிறார் மாணவர் நிகில் ஆதித்யன்.
இதையும் படிங்க...'சைக்கிள் ஷேரிங்' திட்டத்தில் மும்முரம் காட்டும் சென்னை மாநகராட்சி!