தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து! - சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

விருதுநகர்: சிவகாசி தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீ எரிந்து சேதமானது.

MATCH
MATCH

By

Published : May 4, 2021, 10:21 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இரவு - பகல் என ஷிப்ட் அடிப்படையில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஷிப்டிலும் பெண்கள் உட்பட சுமார் 250 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பகல் ஷிப்ட் வேலைகள் முடிந்த தொழிலாளர்கள் அனைவரும் வீட்டுக்கு திரும்பிய போது தீப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தில் மூலப் பொருளில் உராய்வு ஏற்பட்டு திடிரென தீவிபத்து ஏற்பட்டது.

இது குறித்து சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியிலும் மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படும் இயந்திரம், தீக்குச்சிகள் ஆகியன முழுவதும் எரிந்து சேதமடைந்தன.

இதன் சேத மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. தீப்பெட்டி தொழிற்சாலை விபத்து காரணமாக அங்கிருந்து கிளம்பிய புகை மண்டலம் அப்பகுதி முழுவதும் பரவி அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பகல் பணி முடிந்து தொழிலாளர்கள் வெளியேறிய நிலையில் இரவு பணிக்கு தொழிலாளர்கள் யாரும் வராதபட்சத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் யாருக்கும் எந்தவிதமான காயமோ உயிரிழப்போ ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details