விருதுநகர்: தீபாவளியை முன்னிட்டு பட்டாசு தயாரிப்பு நகரமான சிவகாசியில் இருந்து நாடு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனை நடந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டாசுகள் இந்தியா முழுவதும் உள்ள பல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தமிழகத்தில் பட்டாசு விற்பனையானது ரூ.50 கோடி வரை குறைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட பட்டாசு உற்பத்தி தொய்வு, பட்டாசு விபத்தில் நடந்த உயிரிழப்பு காரணமாக தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட தொடர் ஆய்வு போன்ற காரணங்களால் தீபாவளிக்கு முந்தைய ஒரு மாத கால பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு 10 சதவீதமாக குறைந்ததாகக் கூறினர்.
இதையும் படிங்க: 'மதுர குலுங்க குலுங்க..' மதுரை தீபாவளி கொண்டாட்டத்தின் ட்ரோன் வீடியோ காட்சிகள்!