விருதுநகர்:Sivakasi fire accident CM relief fund:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே களத்தூரில் கடந்த 1ஆம் தேதி தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் எட்டு தொழிலாளர்கள் படுகாயத்துடன் சிவகாசி, மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்த நிலையில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மூன்று லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி கடந்த 1ஆம் தேதி சிவகாசி அருகே களத்தூரில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த பாறைப்பட்டியைச் சேர்ந்த வீரக்குமார், முருகேசன், மேல மாத்தூரைச் சேர்ந்த பெரியசாமி, எம். மேட்டுப்பட்டியைச் சேர்ந்த குமார் ஆகிய நால்வரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் வீதமும், காயம்பட்ட எட்டு பேருக்கு தலா ஒரு லட்சம் வீதம் என மொத்தம் 20 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்டோரின் வாரிசுகளுக்கு வழங்கினார்கள்.
இதையும் படிங்க:கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் விபத்து!