விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலான மழை பெய்துவருகிறது. சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
இதன் காரணமாக இன்று மட்டும் 500க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தப்பட்டுள்ளது. சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. இம்மாதம் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி பட்டாசு ஆலைகளில் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி வேகமாக நடைபெற்றுவருகிறது.