தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்டு மௌன அஞ்சலி! - Silent prayer to the death of actor Vivek

விருதுநகர்: ரோசல்பட்டி ஊராட்சி பகுதிகளில் மறைந்த நடிகர் விவேக் மறைவிற்கு ஆலமரம் விழுதுகள் அமைப்பினர் மரக்கன்றுகள் நட்டு, அவரது திருவுரவப் படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்டு மௌன அஞ்சலி
நடிகர் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்டு மௌன அஞ்சலி

By

Published : Apr 19, 2021, 12:46 PM IST

மறைந்த திரைக் கலைஞர் பத்மஸ்ரீ ’சின்னக் கலைவாணர்’ நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, விருதுநகரில் ஆலமரம் விழுதுகள் அமைப்பின் சார்பாக 81 மரக்கன்றுகள் நட்டு, மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நடிகர் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்டு மௌன அஞ்சலி

அப்போது, ரோசல்பட்டி ஊராட்சி பகுதியான பாண்டியன் நகர், முத்தால் நகர், விவேகானந்தர் தெரு, காந்தி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆக்ஸிஜன் தரக்கூடிய மரங்களான ஆலமரம், கொன்றை, வேங்கை, புங்கை, வேம்பு உள்ளிட்ட 81 மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினர்.

"விதைத்த நீங்கள் உறங்கினாலும் உங்களால் விதைக்கப்பட்ட விதைகள் உறங்குவதில்லை" என்ற அவரது வாக்கினை மெய்ப்படுத்தும் விதமாகவும், உலகைப் பசுமையாக்க வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்கும் விதமாகவும் ஆலமரம் விழுதுகள் அமைப்பு சார்பில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: 'விவேக் மரணத்திற்கு தடுப்பூசி முழு காரணம் அல்ல- சீமான்'

ABOUT THE AUTHOR

...view details