விருதுநகர் மாவட்டம் பாலம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.
மேலும் தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை என்றால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.