தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகளில் 14 வகையான பொருள்களை கரோனா கால பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்லம் அருகே நியாயவிலைக் கடை உள்ளது. இந்தக் கடையில் நேற்று (ஜூன் 22) 14 வகையான பொருள்கள் வழங்கப்பட்டன.
அப்போது அதில் சில பொருள்கள் இல்லாததால் பொதுமக்கள் அலுவலர்களிடம் கேட்டனர். அதற்கு அலுவலர்கள் சரியாகப் பதில் கூறாததால் பொதுமக்கள் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் சமரசம் பேசி அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் நூதன முறையில் கொள்ளை