தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றவாளிகளைத் தேடிய காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி! - Separate to track down criminals

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருட்டு வழக்கில் குற்றவாளிகளைத் தேடிச் சென்ற நிலையில் கண்மாய் பகுதியில் 12 நாட்டு வெடிகுண்டுகள் கிடந்ததால் காவல் துறையினர் அதிர்ச்சியடைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking News

By

Published : Oct 15, 2019, 1:53 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குடியிறுப்பு பகுதியில் சண்முகம் என்பவரின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் தனிப்படை அமைத்து தேடிவந்தது.

அதனடிப்படையில் வன்னியம்பட்டி மற்றும் மம்சாபுரம் காவல் துறையினர் தனிப்படை அமைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அம்மைந்துள்ள வேலங்குளம் கண்மாய் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

கண்மாய் பகுதியில் 12 நாட்டு வெடிகுண்டுகள்

அப்போது அந்த கண்மாய் பகுதியில் 12 நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததைக் கண்ட காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த நாட்டு வெடிகுண்குகளை மம்சாபுரம் காவல் துறையினர் பறிமுதல் செய்து நாட்டு வெடிகுண்டுகளை யார் வைத்தது என்றும், வன விலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டதா என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details