தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

விருதுநகர்: அரசு அனுமதியளித்த வழித்தடத்தை மீறி மினி பேருந்துகள் இயங்குவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக 70க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Share Auto drivers petition District Collector Share Auto drivers petition District Collector
Share Auto drivers petition District Collector

By

Published : Jan 6, 2020, 9:00 PM IST

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த சேத்தூர் பகுதியில் மினி பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயங்காமல் விதிகளை மீறி மாற்றுப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இயங்கி வருகின்றன.

இந்நிலையில், தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி 70க்கும் மேற்பட்ட ஆட்டோ ஒட்டுநர்கள் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

அவர்களுடைய மனுவில் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கபட்டு உள்ளதாகாவும், இதுகுறித்து பல முறை அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மினி பேருந்து அதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரியலூர் மாவட்ட வாலிபால் போட்டி: 26 அணிகள் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details