தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளம் முன்பு செல்ஃபி எடுத்த இளைஞர்கள்! - செண்பகத்தோப்பு மீன் வெட்டி பாறை அருவி

விருதுநகர்: காட்டாற்று வெள்ளம் முன்பு ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

காட்டாற்று வெள்ளம் முன்பு ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் செல்ஃபி

By

Published : Nov 23, 2019, 7:44 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக அணைகள் மற்றும் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சுற்றுலா தளமாக விளங்கும் செண்பகத்தோப்பு மீன் வெட்டி பாறை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தின் முன்பு செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

காட்டாற்று வெள்ளம் முன்பு ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் செல்ஃபி

இச்செயலானது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி: செல்ஃபி மோகத்தில் அணையில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details