சிவகாசி அருகே உள்ள சுக்கிரவாரப்பட்டி கிராமத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கட்டட தொழிலாளியிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்! - டி.கல்லுப்பட்டி
விருதுநகர்: சிவகாசி அருகே கட்டட தொழிலாளி தங்க நகை வாங்குவதற்காக உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.3,90,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது டி.கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி மாடசாமி (50) என்பவர் சிவகாசியில் உள்ள நகைக்கடையில் தங்க நகை வாங்குவதற்காக உரிய ஆவணம் இன்றி ரூ.3,90,000 பணத்தை எடுத்துக் கொண்டு காரில் சென்று கொண்டிருந்தார்.
இந்தக் காரை மறித்து சோதனையிட்ட அலுவலர்கள் அவரிடம் இருந்த ரூ.3,90,000 பணத்தை பறிமுதல் செய்து கருவூல அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.