விருதுநகர் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அருள்மொழி தேவனையும், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சுரேஷ்குமாரையும் ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”தமிழுக்கும், தமிழருக்கும் தமிழ்நாடு தற்போது சுடுகாடாக மாறியுள்ளது.
நீர்வளத்தை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க கடலுக்கு செல்லும் நீரை தடுத்து நீர்த் தேக்கம் அமைப்போம் என்பது நாம் தமிழரின் வாக்குறுதி.
கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தேவையற்றது; அதற்கு பதிலாக அந்த செலவில் நீர்த் தேக்கம் அமைத்தால் நிலத்தடி நீர் பெருகும்.
தமிழ்நாடு ஒரு சுடுகாடு: சீமான் - சீமான் பரப்புரை
விருதுநகர்: தமிழுக்கும், தமிழருக்கும் தற்போது தமிழ்நாடு சுடுகாடாக மாறியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சீமான் பரப்புரை
வேளாண்மையை மீட்கவும் வேளாண்மையை அரசுத் தொழிலாக மாற்றுவதும் நாம் தமிழரின் நோக்கம். மோடி கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் செய்த நலத்திட்டம் ஏதேனும் ஒன்று சொல்லி வாக்கு கேட்க முடியுமா? வெடிகுண்டு வீசி கொல்வதைவிட சொந்த நாட்டு மக்களை பட்டினி போட்டு கொள்வது பயங்கரவாதம்” என காட்டமாக தெரிவித்தார்.