விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள விக்டோரியா மேல்நிலைப்பள்ளி தொடங்கி 125 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. எனவே, 125ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
சாலைப் பாதுகாப்பு, நெகிழி ஒழிப்பு - விருதுநகரில் விழிப்புணர்வுப் பேரணி - awareness rally
விருதுநகர்: சாலை பாதுகாப்பு, நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விருதுநகரில் பள்ளி மாணவ, மாணவியர் பேரணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பேரணியில், சாலைப் பாதுகாப்பு, நெகிழி ஒழிப்பு குறித்து பதாகை ஏந்திய பரப்புரை நிகழ்த்தப்பட்டது. மேலும், இதில் பெண் சிசுக்கொலை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றையும் விளக்கும் பதாகைகளை மாணவ, மாணவியர் கையில் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வுப் பேரணி சென்றனர்.
விக்டோரியா மேல்நிலைப்பள்ளி நடத்திய இந்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதில், சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.