தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி: ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு - விருதுநகர் பள்ளி கண்காட்சி

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மங்காபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவர்கள் படைத்த படைப்புகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Tn vnr school science exhibition  விருதுநகர் பள்ளி கண்காட்சி  மங்காபுரம் பள்ளி கண்காட்சி
மங்காபுரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

By

Published : Jan 7, 2020, 11:51 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மங்காபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியை டிஎஸ்பி ராஜேந்திரன் தொடங்கிவைத்தார். கண்காட்சியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவியல் சார்ந்த புதிய படைப்புகளை அவர் பார்வையிட்டு, அதுகுறித்த விளக்கங்களையும் கேட்டறிந்தார்.

அதில், முக்கியமாக முள் ஆணி படுக்கையின் மீது ஒருவரை படுக்கவைத்து அவர் மீது கற்களை வைத்து சுத்தியல் கொண்டு உடைக்கும்போது அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதது குறித்து மாணவர்கள் விளக்கினர்.

மங்காபுரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சோலார் மின் வெப்ப சக்தி மூலம் ரயிலை இயக்க வைப்பது, இயற்கை விவசாயம் செய்து லாபம் ஈட்டுவது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது போன்றவை குறித்த அறிவியல் சார்ந்த படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இக்கண்காட்சியை காண்பதற்கு சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வந்திருந்தனர். இந்நிகழ்வில், திறம்பட அறிவியல் படைப்புகளைச் செய்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: கிளி மூக்கு வால் சேவல் கண்காட்சி - முதல் பரிசைத் தட்டிச் சென்ற சென்னை சேவல்

ABOUT THE AUTHOR

...view details