விருதுநகா் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையை சோ்ந்தவா் காளியப்ப பிள்ளை. அவா் அந்த பகுதியில் கட்டட வேலை செய்துவருகிறார். அவருடைய மகள் பாண்டிச்செல்வி (19) மேட்டமலை அருகே உள்ள சின்னக்காமன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு தோ்வு முடிவில் பாண்டிசெல்வி தோ்ச்சி பெற்று இருந்தாலும் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார்.
+2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பள்ளி மாணவி தற்கொலை! - suicide
விருதுநகர்: சாத்தூா் அருகே பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டிசெல்வி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் இருந்தவா்கள் உடனடியாக சாத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினா் பாண்டிச்செல்வியின் உடலை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து சாத்தூர் காவல் துறையினர் வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா். பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டமலை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது